Video: கனமழை காரணமாக கோவை குற்றால அருவி, நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! - வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை
கோவை: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையால், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் அதிக அளவு நீர் வரத்துள்ளதால் தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி மாநகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.