மயிலையில் சாலையோர கடைகளில் சாதாரணமாக காய்கறி வாங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - trending videos
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மயிலாப்பூரில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென காரில் இருந்து இறங்கி, சாலையோர காய்கறி கடையில் காய்கறிகள் மற்றும் கிழங்குகளை வாங்கினார். மேலும் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார். இதனை சற்றும் எதிர்பாராத வியாபாரிகள் மற்றும் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.