'நீங்க வரியை உயர்த்திட்டு, மத்திய அரசு மீது பழிபோடுறீங்க': நிர்மலா சீதாராமன் ஆவேசம் - fm nirmala sitharaman on dmk in parliament
டெல்லி: 'பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோது தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு ஜிஎஸ்டி மீதும் மத்திய அரசு மீதும் பழிப்போட்டுவிட்டு மாநில வரியை அதிகரித்துள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் உரையாற்றியதால் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பிக்கள் ஆவேசமடைந்தனர். நிதியமைச்சரின் உரைக்குப் பதிலளிக்காமல் வெளிநடப்பும் செய்தனர்.