பைக் மோதி தூக்கி வீசப்பட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியர்; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
உத்தராகண்ட்: டேராடூன் தோய்வாலா சுங்கச்சாவடியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறை விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னதாக, கட்டுப்பாட்டை இழந்த லாரி டோல் கேபினுக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தி இருந்தது. இன்று அதே சுங்கச்சாவடியில் ரோட்டைக் கடந்த சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது பைக் மோதியதில் தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் அவர் 50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார். காயமடைந்த பெண் ஹிமாலயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வலது காலில் மூன்று எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.