கருமேகங்கள் சூழ்ந்து கனமழை - விவசாயிகள் பெருமகிழ்ச்சி - திருப்பத்தூரில் கனமழை
திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 30) மாலை பொழுதில் கருமேகங்கள் சூழ்ந்து ஆம்பூர் நகரப்பகுதி, மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான, பச்சகுப்பம், பெரியகொம்பேஸ்வரம், சின்னவரிகம், வெங்கிளி,அயித்தம்பட்டு, வடபுதுப்பட்டு ஆகிய பல்வேறு கிராமப்பகுதிகளில் திடீரென அரை மணி நேரத்திற்கும் மேலாக வெயிலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயரும் என்பதால் விவசாயிகளும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.