சோலாப்பூர் FGD ஆலையில் திடீர் தீ விபத்து...! உயிர்ச்சேதம் இல்லை எனத்தகவல்! - சோலாப்பூர் FGD ஆலை
மகாராஷ்டிரா: சோலாப்பூரில் உள்ள இந்திய அணுசக்தி அனல் மின் கழகத்தின் FGD ஆலையில் நேற்று (ஜூலை 21) மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மனிதவளத்துறை அலுவலர் சுபாஷ் வாக்மரே தெரிவித்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், எரிபொருள் வாயு பேரழிவு என்ற ஒரு புதிய திட்டத்துக்கான ஒத்திகையின் போது, இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது.