தீப ஒளியில் ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய மாவிளக்கு ஊர்வலம் - ஈரோடு தண்டுமாரியம்மன் கோயில்
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு தட்டில் தீபஒளி ஏற்றி ஊர்வலமாக கோயிலுக்கு சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இளம்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஒட்டுமொத்த கிராமமக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர். விழா நிறைவாக கம்பம் பிடுங்கும் விழாவில் வானவேடிக்கையுடன் கம்பம் பிடுங்கப்பட்டு பவானிஆற்றில் விடப்பட்டது.
Last Updated : Apr 21, 2022, 10:26 PM IST