Video: இங்கிலாந்து பிரதமர் போரிஸின் இந்தியப் பயணத்தின் முதல் நாள் நிறைவு! - England Prime Minister Boris Jhonson'
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது இந்திய பயணத்தை குஜராத்தில் இன்று(ஏப்.21) தொடங்கினார். அஹமதாபாத்திலுள்ள சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ், அங்குள்ள வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார். அதன்பின், ஆஸ்ரமத்திலுள்ள காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டையை வைத்து நூல் சுற்றுவதைக் கற்று, பின் நூல் சுற்றினார். பிறகு அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியைச் சந்தித்தார். அதன் பிறகு போரிஸ், காந்திநகரிலுள்ள அக்சர்தாம் கோயிலைச் சுற்றிப்பார்த்தார். இங்கிலாந்து பிரதமரின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தில் கடைசி நாளான நாளை(ஏப்.22) டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.