Video:ஷூ கவரை கழற்ற ஊழியரை பணித்த உ.பி. அமைச்சர்: மக்கள் கடும் கண்டனம் - Minister
உத்தரப் பிரதேசத்தின் கேபினட் அமைச்சர் பேபி ராணி மவுரியா கடந்த வெள்ளிக்கிழமை உன்னாவ் சென்றுள்ளார். அங்கே, ’அச்சல்கஞ்ச்’ பகுதியில் கட்டப்பட்டுள்ள யூனிட்டை அவர் ஆய்வு செய்தார். அதன்பின், அமைச்சர் பேபி ராணி மவுரியா வெளியே வந்தபோது, அவருடன் வந்த ஊழியர் ஒருவர் அமைச்சரின் ஷூ கவரை கழற்றினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.