திருச்சூர் பூரம் விழாவில் யானை அட்டகாசம்! - பூரம் திருவிழா
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் சிவன் கோவிலில் உலக புகழ்பெற்ற பூரம் திருவிழா தொடங்கி நடந்துவருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த யானை ஒன்று மணிகண்டனாலு என்ற இடத்தில் அங்கும் இங்கும் ஓடி அட்டகாசம் செய்தது. எனினும் யாருக்கும் ஆபத்தை விளைவிக்கவில்லை. யானை அங்கும் இங்கும் ஓடியதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், சிறிது நேரத்தில் யானை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.