‘திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ - துரைமுருகன் நம்பிக்கை - திமுக கூட்டணி கட்சிகள்
வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த துரைமுருகன், “எதிர்க்கட்சியாக இருந்தபோதே வெற்றி பெற்றோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என நம்பிக்கை தெரிவித்தார்.