40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரௌபதியம்மன் தீ மிதித் திருவிழா! - அக்னி வசந்த விழா
திருவண்ணாமலை : ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமான அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழா 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பால்குடம் ஏந்தி பக்தர்கள் திரௌபதி அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றியும், அம்மன் ஆலயத்திலிருந்து மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவ சிலையை பக்தர்கள் ஏந்தியவாறு தீ மிதித்து வழிபட்டனர். 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றும் தீ மிதி திருவிழாவை சிறப்பித்தனர்.