புகைப்பிடிக்காதீர்கள்... சிகரெட்டால் விழிப்புணர்வு ஓவியம் - சிகரெட்டால் விழிப்புணர்வு ஓவியம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஊரைச் சேர்ந்த ஓவியர் செல்வம் பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் பற்ற வைக்காத சிகரெட்டை மட்டும் கொண்டு 'புகை பிடிக்காதீர்' என்ற விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார். சிகரெட்டின் அடியில் பஞ்சு போன்ற பகுதியை நீர் வண்ணத்தில் தொட்டு, 'புகை பிடிக்காதீர்' விழிப்புணர்வு ஓவியத்தை 10 நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்து முடித்தார். பிரஷ்க்கு பதிலாக பற்ற வைக்காத வெறும் சிகரெட்டாலேயே படம் வரைந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 6, 2022, 2:59 PM IST