கிரிக்கெட் - மைதானம் கோரும் 'பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறன் வீரர்கள்' - மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி
ஆம்பூர்: சென்னையில் அடுத்த மாதம் கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் இருந்து 13 அணியினர் பங்கேற்று விளையாட உள்ளனர். தொடர்ந்து, சேலம் செம்பியன் அணிக்காக விளையாடும் ஆம்பூர் பகுதியில் உள்ள கண் பார்வை குறைவு மற்றும் கண்பார்வையற்றோர் இரண்டு பேர், இத்தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் அணியினர் தாங்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு இடம் இல்லாததால், தங்களுக்கு என தனிப் பயிற்சி மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
TAGGED:
disabled athletes