மலைக்கிராமத்தில் காட்டு யானைகள் - மக்கள் அச்சம்! - CCTV Footage
திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சோலைக்காடு என்ற கிராமத்தில் இன்று(மே 13) அதிகாலை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைக் கூட்டம் உலா வந்தது. இக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.