மனு அளிக்க வந்த பெண்ணை பேப்பரால் அமைச்சர் தாக்கினாரா? - தன்னை விளையாட்டாக தட்டியதாக பெண் பேட்டி - Virudhunagar district Minister speech
விருதுநகர்: பாலவனத்தம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த கலாவதி என்பவரை பேப்பரால் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இதனைக் கண்டித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து தலையில் தாக்கப்பட்டதாக கூறிய கலாவதி என்ற பெண்ணிடம் கேட்டபோது, அமைச்சரை கடந்த 30 ஆண்டுகளாக தங்களுக்கு தெரியும் எனவும், தன்னை செல்லமாக பேப்பரால் தட்டியதாகவும் அவர் கூறினார்.