உடைந்து தொங்கும் சோழீஸ்வரர் கோயில் கொடிமரம் - பக்தர்கள் அச்சம் - உடைந்து தொங்கும் கோயில் கொடிமரம்
மயிலாடுதுறை: குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள செப்புக் கவசமிட்ட கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதனை சரிசெய்யாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாதவாறு நிலை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கொடிமரத்தின் மேலுள்ள கொடி சேதமடைந்து உடைந்து தொங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கொடிமரத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.