தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன்! - திண்டுக்கல்லில் விநோத நேர்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது குரும்பப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் மாதம்மாள் திருக்கோவில் சித்திரை மாத திருவிழாவை ஒட்டி 15 நாள்கள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கோவில் பூசாரி விரதமிருந்த அனைவரின் தலையிலும் அருள் வந்து தேங்காயை உடைத்தார். இதனைப் பார்க்க ஏராளமான மக்கள் பக்தி பரவசத்தோடு கூடியிருந்தனர்.