கொட்டும் மழையிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்! - நினைத்தாலே முக்தி தரும்
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தித்தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாதபௌர்ணமியினை முன்னிட்டு நேற்று (அக்.10) சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். எட்டு மணி நேரமாக நீண்ட வரிசையில் 14 கிலோ மீட்டர் வரை காத்திருந்த பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசனம் செய்ததோடு, கொட்டும் மழையிலும் சிவபுராணம் பாடிய படியே பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.