கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்.. அருவிகளில் பாதுகாப்பு கைப்பிடிகள் அமைக்கக்கோரிக்கை.. - வெள்ளி நீர் வீழ்ச்சி
திண்டுக்கல்: கொடைக்கானலிலுள்ள குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள், வெள்ளி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில் அங்கு ஆர்வமுடன் அவர்கள் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இதனிடையே பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்டப்பகுதிகளில் பாதுகாப்பு கைப்பிடிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.