வீடியோ: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் தாக்குதல் - Youth Congress Srinivas BV attack video
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எம்பி ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.