தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video...கும்பகோணத்தில் விநாயகர் சிலைக்கு ரூ.11 லட்சம் பணநோட்டுகளைக்கொண்டு அலங்காரம்

By

Published : Aug 29, 2022, 3:45 PM IST

Updated : Aug 31, 2022, 10:16 AM IST

தஞ்சாவூர் அருகே கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள பிரசித்திபெற்ற, பகவத் விநாயகர் திருக்கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஏழாம் நாளான இன்றிரவு ரூ.11 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் பல வெளிநாட்டு ரூ. நோட்டுகளால், உற்சவர், குபேர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்வேறு 2 ஆயிரம், 500 ரூபாய், 200, 100, 50, 20, 10, 5, 2, 1 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் இன்றி சில்லறை நாணயங்களும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா போன்ற நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் சிறப்பு அலங்காரத்தில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கரன்சியால் அலங்கரிக்கப்பட்ட குபேர விநாயகரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
Last Updated : Aug 31, 2022, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details