எட்டு முட்டைகளை வரிசையாக கக்கிய நாகப்பாம்பு - நாகப்பாம்பு முட்டை விழுங்குமா
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலாவில் நாகப்பாம்புகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து கோழிகளையும் முட்டைகளையும் விழுங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வகையில் இன்று (ஏப். 29) கோழி வளர்ப்பவரின் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று எட்டுமுட்டைகளை விழுங்கியது. இதனைபார்த்த உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் பாம்பை வன அலுவலர் பிடிக்கையில், விழுங்கிய எட்டு முட்டைகளை வரிசையாக பாம்பு கக்கியது.