Video: சோனியா காந்தி தொகுதியில் பட்டியல் இன மாணவரை, கால்களை நக்கச்சொல்லி கொடூரத்தாக்குதல்! - Video of Dalit student beating viral
உத்தரப்பிரதேசம் மாநிலம், ரேபரேலியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவரை 4,5 பேர் சுற்றி வளைத்து தாக்குவதும், பின்னர் அவரை தங்களின் கால்களை நக்கச்சொல்லி இழிவுபடுத்தும் காட்சிகளும் உள்ள காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அந்த இளைஞரை தாக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வானது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி வென்ற மக்களவைத் தொகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.