ஜோடியாக அமர்ந்து தண்ணீர் குடித்த காக்கைகளின் க்யூட் வீடியோ! - cute video
கோடைக்காலம் முடிந்தும், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி இரண்டு காக்கைகள் அலைந்து திரிந்து, அங்கிருந்த குடிநீர் குழாய் ஒன்றைக் கண்டறிந்து அமர்ந்துள்ளன. தொடர்ந்து, குழாயில் வரும் நீரை ஒரு காக்கை தனது அலகில் லாவகமாகக் குடித்து அதை மற்றொரு காக்கைக்கு கொடுத்தது. சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே இந்தக் காக்கைகள் இரண்டும் தண்ணீர் குடிக்கும் க்யூட்டான காட்சியை அப்பகுதி மக்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.