பெட்ரோல், டீசலுக்கு இறுதிச்சடங்கு - பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்குகிறது. இதனை கண்டிக்கும் விதமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசலை இரண்டு கேன்களில் அடைத்து மாலை அணிவித்து, பால் ஊற்றி , வாய்க்கரிசி போட்டு இறுதிச்சடங்கு செய்தனர். அப்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.