உரிமையாளர் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் - வாட்ஸ் அப்
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. பல்வேறு ஓடைகள் மற்றும் கட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோம்பையூர் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பாலம் வழியாக நேற்று (ஆகஸ்ட் 31) மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை உரிமையாளர் ஓட்டிசென்றார். அப்போது அவரது கண்முன்னே மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.