கொடைக்கானலில் தொடர் மழை - அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு! - சுற்றுலாப்பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள பூண்டி, கவுஞ்சி, பள்ளங்கி, அஞ்சுவீடு, வெள்ளி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குடும்பத்துடன் அருவிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.