எனக்கு தமிழ்நாட்டு "குல்பி" மிகவும் பிடிக்கும் - ராகுல் காந்தி - Congress party
கன்னியாகுமரி முளகுமூடு செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி மாணவர்களிடையே கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்தது "குல்பி" என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் அவர் கூறினார். இதனை தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.