இரட்டை விரலில் 234 பம்பரங்களைச் சுழற்றிய அதிமுக தொண்டர் - TN Assembly
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர் யூஎம்டி ராஜா, தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெற்றிபெறக் கண்களை மூடி இருசக்கர வாகனம் ஓட்டி வித்தியாசமான முறையில் ஆதரவு திரட்டினார். இந்நிலையில், இன்று (மார்ச் 30) 234 தொகுதிகளிலும் அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை வலியுறுத்தும் வகையில் இரட்டை விரலால் 234 பம்பரங்களைச் சுழற்றி அசத்தியுள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.