தீரன் சின்னமலை பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! - தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.17) மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தநிகழ்வில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.