Viral Video - ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - ரயில்வே நிலையம்
சென்னை: வேளச்சேரி முதல் அரக்கோணம் வரை செல்லக்கூடிய ரயிலானது ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, திடீரென ரயிலில் வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரையொருவர் கல் மற்றும் கட்டைகளால் வீசி தாக்கிக் கொண்டனர். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.