கிறிஸ்துமஸ், புத்தாண்டு - குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கேக் விற்பனை ஜோர்! - குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கேக்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கேக். இந்த கொண்டாட்டத்தின் போது மக்கள் கேக் வெட்டி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிபடுத்துவர். அந்தவகையில் குன்னூர் பெட்போர்ட் பகுதியில் உள்ள கேக் தயாரிக்கும் கடையில் வண்ண கேக்குகளை தயாரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிளாக் பாரஸ்ட், சாக்லெட், பிளம் கேக், வெண்ணிலா, கிரீம் கேக்குகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதோடு குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் பொம்மை வடிவ கேக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா கேக்குகளின் விற்பனை களை கட்டியுள்ளது.