மயிலாடுதுறையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்... - 3 km awareness run
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய விதிகளின் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.