ரயிலில் போதைப்பொருள் விற்பனை - தட்டிக்கேட்ட தமிழ் இளைஞரை 'ஹிந்தியில்' தரக்குறைவாக பேசிய ஊழியர் - போதைப்பொருள் விற்பனை செய்த ஊழியர்
சென்னையிலிருந்து ஜூன் 5ஆம் தேதி, 12603 என்ற எண் கொண்ட அதிவிரைவு ரயில் ஹைதராபாத்திற்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயிலில் உணவு விற்பனை செய்யும் ஊழியர் ஒருவர், சட்டவிரோதமாக பான் பாரக் என்னும் போதைப்பொருளை மறைமுகமாக விற்றுவந்துள்ளார். இதனையறிந்த தமிழ் இளைஞர் ஒருவர், அவரிடம் விசாரித்தபோது, உணவு விற்பனை செய்யும் ஊழியரின் கைப்பை முழுவதும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்நபர் தமிழ் பேசும் இளைஞரை தரைக்குறைவாக இந்தியில் திட்டியுள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் விற்பன்னரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.