கோதண்டராமர் திருக்கோயில் தேர் பவனி திருவிழா - வெள்ளையர்களின் பிரதிநிதி பிளேஸ் துரை
செங்கல்பட்டு: ஏரிகாத்த ராமர் என்னும் கோதண்டராமர் திருக்கோயில், பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (ஜூலை 13) தேர் பவனித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோதண்டராமரை தரிசித்தனர். கிபி 17ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆட்சியின்போது, பெரு வெள்ளத்தில் மதுராந்தகம் அழியும் நிலையிலிருந்தபோது வெள்ளையர்களின் பிரதிநிதி பிளேஸ் துரை , 'மதுராந்தகம் ஏரி உடையாமல் உங்கள் கடவுள் காப்பாற்றினால் நான் தலை வணங்குகிறேன்' எனக் கூறியதாகவும், பெரு வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டதைக் கண்டு பிளேஸ் துரையே சிலிர்த்துப் போனதாக வரலாறு.