கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு! - First District Chief Officer
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட கல்வி அலுவலராகப் பணிபுரிந்த குமரன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் முதன்மைக் கல்வி அலுவலராக அறிவிக்கப்பட்டார். இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆய்வாளர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வருகைதந்து குமரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.