KTM பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்: முதியவர் மீது மோதி விபத்து: பதறவைக்கும் காட்சிகள் - குத்தாலம் அருகே இருசக்கர வாகன விபத்து
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே மல்லியம் கிராமத்தில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது, உயர்ரக (KTM) இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், தனது கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளார். இதில் காயமடைந்த முதியவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.