கொட்டும் மழையில் சிறுவனின் ’ஜாலி’ குளியல் - kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை கத்திரி வெயிலின் இடையே கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கறு மேகங்கள் சூழந்து கன மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் கொட்டும் மழையில் ஒரு சிறுவன் தனது உடலில் சோப்பு போட்டுக்கொண்டு ஆனந்த குளியல் போட்டார்.