Video: 'நான் பாஜக-வே கிடையாதுங்கோ..! : குமுறும் பாக்கியராஜ் - மோடி குறித்து பாக்கியராஜ்
சமீபத்தில் இயக்குநர் பாக்கியராஜ் ஒரு நிகழ்ச்சியில், 'பிரதமர் மோடி குறித்து தவறாக பேசுபவர்கள் அனைவரும் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்களே' என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு விவாதங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து தற்போது தன்னிலை விளக்கம் ஒன்றை காணொலி வாயிலாக பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். அந்த விளக்கும் காணொலியில் தான் மேடையில் பேசியது, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டுள்ளார்.