கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிப்பதற்கு தடை - தேவதானப்பட்டி வனச்சரகம்
தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.