சேற்றில் சிக்கி உயிரிழந்த யானைக்கன்று - பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை
நீலகிரி மாவட்டம், மழவன் சேரம்பாடி பகுதியில் இன்று (அக்டோபர் 2) அதிகாலை காட்டு யானைகள் வயல் பகுதிக்குள் புகுந்துள்ளன. அதில் யானைக்கன்று ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளது. யானைக்கன்றின் அருகில் நகராமல் நிற்கும் தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகளின் பாசப் போராட்டம் காரணமாக, யானைக்கன்றின் அருகில் வனத் துறையினர் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத் துறையினர் அந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.