பெரம்பலூர் அய்யனார் கோயில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு - பெரம்பலூர் அய்யனார் கோயில் தேர் திருவிழா
பெரம்பலூர்: கல்பாடி கிராமத்தில் ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பூரணி, ஸ்ரீ புஷ்கலை,ஸ்ரீ மண்டபத்து முத்துசாமி மற்றும் ஸ்ரீ தொட்டியத்து கருப்பணசுவாமி ஆகிய ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் சித்திரை மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று (மே 15) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.