வெளியே சுற்றித் திரிந்த சிறுவன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!
விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டப்போது, வெளியே சுற்றித் திரிந்த சிறுவனை அழைத்து கண்டித்தனர். பின்னர், சிறுவன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் தான் செய்த தவறை பேச வைத்து நூதன தண்டனை வழங்கினார்கள். ஒலிபெருக்கியில் பேசிய சிறுவன் ’’தான் வெளியே சுற்றி மாட்டிக் கொண்டதாகவும் காவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பணியாற்றுவதாகவும், யாரும் வெளியே சுற்ற வேண்டாம், எதற்காக வெளியே வருகிறீர்கள்’’ என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒலிபெருக்கியில் பேசினான்.