குன்னூர் ரயில் நிலையத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - நீலகிரி
நீலகிரி: சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புலிகள் காப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் அருகே குன்னுாரில் தனியார் கல்லுாரி சார்பில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. குன்னுார் ரயில் நிலையத்தில் கல்லுாரி மாணவிகள் புலிகள் குறித்த கலை நிகழ்ச்சி நடத்தி காட்டினர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குன்னுார் மகளிர் காவல் ஆய்வாளர் கோமதி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவி, மற்றும் ரயில்வே துறை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.