தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - More than 250 students participated in the Chess Olympiad

By

Published : Jul 21, 2022, 5:48 PM IST

ஈரோடு: 44-வது செஸ் ஒலிம்பியாட் பேட்டி இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக ஈரோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details