75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடியில் பெண்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி - WOMENS BICYCLE RALLY
வேலூர்: 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டும், 44 வது சதுரங்க போட்டி விழிப்புணர்வு குறித்தும் ரோட்டரி பெண்கள் அமைப்பு சார்பில் காட்பாடியில் இன்று (ஆக.6) மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.