ஒகேனக்கல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - ஒகேனக்கல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று (செப்.6) நீர்வரத்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அவ்வப்போது குறைந்தும் பெருகியும் காணப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து காவிரி கரையோரப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.