'தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதித்த தடையை திரும்ப பெறுக' - அர்ஜூன் சம்பத் பேட்டி - அர்ஜூன் சம்பத் பேட்டி
மயிலாடுதுறை: தமிழையும் சைவத்தையும் அடிப்படையாகக் கொண்ட தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ தடை விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். "கடந்த காலங்களில் பல எதிர்ப்புகளையும் மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. திருமடங்களுக்கு என்று பாரம்பரியமும் மரபுகளும் தனியாக உள்ளன. இதனை தடை செய்வது இந்து சமய நிகழ்வுகளில் அரசு தலையிடும் செயல் ஆகும். சட்டப்படியும் கூட ஆர்.டி.ஓ செய்த செயல் தவறானது. உடனடியாக இதனை வாபஸ் பெற வேண்டும். வழக்கம்போல் ஆதினத்தின் பாரம்பரியங்கள் மரபுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்தே இந்து மக்கள் கட்சியின் கோரிக்கை" என அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.