போஸ்டில் மோதி இளைஞர் உயிரிழப்பு - அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் - ஆந்திரா தடுப்புச் சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு
ஆந்திரா: சித்தூரில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் போஸ்டில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே சக வாகன ஓட்டிகள் இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் அனுதீப் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.